இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்டம்

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்ட செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனையின் கீழ் மேலதிக அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் இன்று (04) இடம் பெற்றது.

குறித்த செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி வில்வரத்னம் சிவப்பிரியா கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட் செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறை தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் இடம் பெற்றது.

ஊழல் பற்றி இலங்கையின் சட்ட ரீதியான பொருள் கோடல் தொடர்பான விளக்கங்கள், 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள் மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் மேலும் நடைமுறைசார் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடய ஆய்வுகள் மூலம் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க