இலங்கை வருகின்றார் விஜய் தேவரகொண்டா

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’ திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புகள் இலங்கையில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘VD12 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் கௌதம் தின்னனுரி உள்ளிட்ட குழுவினர் இந்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

20 முதல் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்