இலங்கை வந்துள்ள ராக்கி பாய்

இலங்கை வந்துள்ள ராக்கி பாய்

இந்திய நடிகர் நவீன் குமார் கௌடா (‘யாஷ்’), இலங்கை முதலீட்டு வாரியத்தின் (BOI) தலைவர் தினேஷ் வீரக்கொடியை சந்தித்துள்ளார்.

இதனை இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிளாக்பஸ்டர் இந்திய திரைப்படமான ‘KGF’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக அறியப்பட்ட நடிகர் யாஷ், விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்திப்பின் விபரங்களைப் பகிர்ந்து கொண்ட தினேஷ் வீரக்கொடி, மூன்று ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்ற நடிகர், தனது சில திரைப்பட படப்பிடிப்புகளுக்கு இலங்கையைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்