இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 6 சதம், விற்பனை பெறுமதி 298 ரூபாய் 14 சதமாக பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபாய் 51 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபா 18 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் உத்தியோகபூர்வ அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.