இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Shanakiya Rasaputhiran

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad