இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஐயம்

-கிரான் நிருபர்-

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது நாட்டின் முன்னேற்றத்திற்கு கிழக்கு பல்கலைக்கழகம் எப்படி பங்காற்ற முடியும் என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

முக்கியமாக ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன்,  ஏற்றுமதி எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பு செய்யும் என ஆலோசிக்கப்பட்டது.

விவசாயம், மீன்பிடி, சிறுதானியம் மற்றும் சுற்றுலா துறைகளை முன்னேற்றுவது தொடர்பான யோசனைகள் மற்றும் திட்டங்கள் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைசார்வல்லுனர்களினால் மத்திய வங்கி ஆளுனரிடம் முன்வைக்கப்பட்டது.

மேலும் இக் கலந்துரையாடலில்,

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கொண்டுவரப்படவுள்ள கைத்தொழில் பூங்காவினை எப்படி வினைதிறனாகவும், நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவதற்க்கும் பயன்படுத்துவது குறித்து இலங்கையில் நிதி ஸ்த்திரத்தன்மையை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், பீடாதிபதிகள், துறைசார் வல்லுனர்கள்,  தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர், துறைசார் வல்லுனர்கள், மத்திய வங்கி – திருகோணமலை பிராந்திய அலுவலகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பொருளாதார வல்லுனர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்