இலங்கை நிலைவரம் தொடர்பில் மோடி பேச்சு

இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.