இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக , மதுரையைச் சேர்ந்த யாசகர் ஒருவர், முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவரான பூல்பாண்டி என்பவர் மதுரை வீதிகள் தோறும் யாசகம் பெற்று, தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.
இந்தநிலையில் தனக்கு கிடைக்கப்பெற்ற யாசக நிதியிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவும் நோக்கில் மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவர் கொரோனா பெரும் தொற்று காலத்திலும், தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 30 தடவைக்கு மேல் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.