இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் தற்போது வவுனியாவில் நடைபெற்று வருகின்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த கூட்டத்தில், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான நிலைப்பாடு குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்த மத்தியக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், குகதாசன், ஸ்ரீதரன், சுமந்திரன், வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்