
இலங்கை – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடர்!
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி, முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
அத்துடன், அவுஸ்திரேலிய அணியின் இந்த சுற்றுப் பயணத்தில் இரண்டு டெஸ்ட் தொடர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 29 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.
இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்