இலங்கை அரசாங்கம் பொதுச் சேவைகள் சங்கத்தின் குழு கூட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைஇ விலைவாசி அதிகரிப்பு அதனைத் தொடர்ந்து வந்துள்ள அரசியல் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் அரச சேவையானது தொழில் உரிமை, பாதுகாப்பு, கௌரவம் என்பனவற்றை இழந்த நிலையில் இன்று ஆட்டம் கண்டுள்ளது.தொழில் வல்லுனர்கள்இ நிபுணத்துவ மிக்க கல்வியியலாளர்கள், உட்பட ஏன் நீதிபதிகளே இந்த நாட்டை விட்டு தப்பி ஓடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இதிலிருந்து பாதுகாக்க அனைத்து அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் க.நடராஜா தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் பொதுச் சேவைகள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட குழு கூட்டம் இன்று ஞாயிற்றுகிழமை திருக்கோயில் குமர வித்தியாலயத்தில் சங்கத்தின் அமைப்பாளர் பி கோகுலோஜன் தலைமையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்