இலங்கை அணித் தலைவராக சரித் அசலங்க

இலங்கை – பங்களாதேஷ் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு இலங்கை டி20 அணியின் உபத் தலைவர் சரித் அசலங்கவிற்கு ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் நடுவர் லிண்டன் ஹன்னிபால் அளித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இலங்கையின் டி20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை சமீபத்தில் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது.

அதன்படி 2020ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இருந்தும் வனிந்து ஹசரங்க நீக்கப்பட்டுள்ளார்

அதன்படி, இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு சரித் அசங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக ஜெப்ரி வென்டசேவை அணிக்கு அழைப்பது தொடர்பில் தெரிவுக் குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்