இலங்கையில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சூறாவளி புயல் , கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கை அனுபவிக்கும் பகுதிகளில் நீரினால் பரவும் மற்றும் தொற்று நோய்கள் பரவுவது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மழைக்காலத்தில் பொதுவாக வயிற்றுப்போக்கு, வாந்தி, லெப்டோஸ்பிரோசிஸ், டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றின் அதிகரிப்பு காணப்படுவதாக சிரேஷ்ட ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, நவம்பர் மாதத்திற்கான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 3,024 ஆகவும், 2024 இல் 45,373 ஆகவும் காணப்பட்டது.
இந்த தரவுகளின் அடிப்படையில் நவம்பர் 18 மற்றும் 24 க்கு இடையில் 23 மாவட்டங்களில் 880 டெங்கு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன – முந்தைய வாரத்தை விட 25.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொதுவாக எலிக்காய்ச்சல் என்று அழைக்கப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயும் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, 2024 இல் நாடளாவிய ரீதியில் 5,000 க்கும் அதிகமான தொற்றுக்கள் உள்ளன.

சேற்று நீரின் வெளிப்பாடு – லெப்டோஸ்பைரோசிஸ{க்கு வழிவகுக்கும் என்றும் , தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நீரினால் பரவும் நோய்கள் பரவுவதைத் தடுக்க, கொதிக்கவைத்து, குளிரவைத்த தண்ணீரைக் குடிப்பது உள்ளிட்ட தொற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.