Sri Lanka Tamil News Site

இலங்கையிலிருந்து முதல் 08 மாதங்களில் 477 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்

- Advertisement -

இலங்கையிலிருந்து இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 477 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உத்தேச வரிச் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக பல தொழில்முறை குழுக்களால் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும் இது தேசத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்றும்; அலுத்கே சுட்டிக்காட்டினார்.

“வருமான வரி சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாட்டை பின்னோக்கி தள்ளுகின்றன. நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களை நிறுத்துவது குறித்து பலர் பேசுகின்றனர். ஆனால், அத்தகைய முடிவுக்கான காரணத்தை ஆராய யாரும் தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட 300 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. எவ்வாறாயினும், எங்களின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 477 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், இவர்களில் சிலர் விடுமுறைக்கு விண்ணப்பித்துவிட்டுச் சென்றிருக்கலாம், மேலும் சிலர் விடுமுறையைப் புறக்கணித்திருக்கலாம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -