இலங்கையின் மேற்கு கடற்கரையில் 100 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கையின் மேற்கு கடற்கரையில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 100 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் இன்று சனிக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வுத் தகவல்களின் பேரில், கடற்படையினர் இலங்கையின் மேற்கு கடல் எல்லைக்குள் இயங்கும் பல நாள் மீன்பிடி இழுவைப் படகை இடைமறித்தனர்.

குறித்த மீன்பிடி கப்பல் மேலதிக விசாரணைக்காக டிகோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இழுவைப் படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 100 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க