இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதம் -0.8 வீதமாக குறைந்துள்ளது.
2024 செப்டெம்பரில் இது -0.5 வீதமாக பதிவானதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், 2024 செப்டெம்பரில் -0.3 வீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம் ஒக்டோபரில் 1.0 வீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், உணவு வகை அல்லாத பணவீக்கம் 2024 செப்டெம்பரில் -0.5%இல் இருந்தது.அது ஒக்டோபரில் -1.6% ஆகக் குறைந்துள்ளது.