இலங்கைக்கு 167,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி!
அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்ததிலிருந்து, இலங்கைக்கு 167,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத்துறை அறிவித்துள்ளது.
இதில் 66,000 மெட்ரிக் டன் சிவப்பு பச்சரிசி மற்றும் 101,000 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்கும், என்று சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோடா தெரிவித்தார்.
அரிசி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது
அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்ய, தனியார் துறைக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 4 முதல் 20 வரை அனுமதி அளித்தது, பின்னர் டிசம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், மீண்டும் ஜனவரி 10 ஆம் திகதி வரை காலக்கெடுவை நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்