இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில்

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

எரிபொருள் பற்றாக்குறையால் தம்மால் நாட்டை சுற்றிப்பார்க்க முடியவில்லை என்று தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள், ‘கோட்டாவே வீட்டுக்குப் போ…’ என்று கோஷமிட்ட பெண் சுற்றுலாப் பயணிகள் பலர் பதாகைகளையும் இலங்கைக் கொடியையும் ஏந்தியிருந்தனர்.