Sri Lanka Tamil News Site

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

- Advertisement -

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தம் இலங்கை ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவித்து பதிவொன்றை இட்டுள்ளார்.

- Advertisement -

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு இணங்க மனித உரிமைகள் மற்றும் உரிய நடைமுறைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவை அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் வலுப்படுத்துவதற்கு தான் நம்புவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!