இலங்கைக்காக வத்திக்கானில் இடம்பெற்ற விஷேட ஆராதனை

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை விஷேட ஆராதனை இடம்பெற்றுள்ளது.

வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஆயர்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி காயமடைந்தவர்களுடன் இணைந்து  வத்திக்கானிற்கு சென்றுள்ளவர்கள் விசேட ஆராதனையில் கலந்துகொண்டுள்ளனர்.