Sri Lanka Tamil News Site

இரு வாரங்களுக்குப் பின்னர் பாண்டிருப்பில் சமையல் எரிவாயு விநியோகம்

- Advertisement -

பாண்டிருப்பில் சமையல் எரிவாயு விநியோகம்
-கல்முனை நிருபர்-

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட கிராமங்களில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.

- Advertisement -

இதற்கமைய, பாண்டிருப்பு கிராமத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக எரிவாயு விநியோகிக்கம் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை மாலை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் விநியோகிக்கப்பட்டன.

இங்குள்ள எட்டு கிராம சேவகர்கள் பிரிவில் இருந்தும் முன்னுரிமை அடிப்படையில் தலா 50 பேர் தெரிவு செய்யப்பட்டு 400 எரிவாயு நிரப்பிய சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்குப் பின்னர் இங்கு எரிவாயு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -