இரு பேருந்துகள் மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

தன்னோவிட்ட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்