வத்தளை பேலியகொடை பெத்தியகொட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
களனியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார் கூரிய ஆயுதங்கள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
- Advertisement -