இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இராணுவ சிப்பாய் உட்பட ஆறு பேர் கைது

-பதுளை நிருபர்-

பதுளை – லுணுகலை ஜனதாபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட ஆறு பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் மூவர் காயமடைந்து மெட்டிக்காத்தன்ன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனதபுர மற்றும் மடோல்சிம மெட்டிக்காத்தன்ன பகுதியை சேர்ந்த 22, 25, 35, 27, 32 மற்றும் 45 வயதுடையவர்களே இவ்வாறு கைத செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகிக்கப்படும் இராணுவச் சிப்பாய் கிளிநொச்சி ஏழாவது காலாட்படை முகாமில் பணிபுரியும் சிப்பாய் எனவும் அவர் மோதலில் ஈடுபட்ட போது விடுமுறையில் இருந்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சந்திரசேகர தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க