Sri Lanka Tamil News Site

இரு இளைஞர்களுக்கு பார்வை கொடுத்த சிறுவன்

- Advertisement -

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உயிரிழந்த 16 வயது சிறுவனின் கண்களால் இரு இளைஞர்கள் பார்வையை பெற்றுள்ளனர்.

தக்ஸித இமேஷ் தனபால (16 வயது) என்ற  சிறுவன் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அளுத்தியுல்வேவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தார்.

இந்நிலையில், குறித்த சிறுவன் கடந்த மே 31ஆம் திகதி விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

- Advertisement -

இறந்த மாணவனின் பெற்றோர்களின் சம்மதத்துடன் அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட விழிவெண்படலத்தை உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்கு முன் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  பார்வையை பெற்றனர்.

மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காக காத்திருப்பதாகவும்,  கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும், அநுராதபுரம் கிளை கண் தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்துள்ளார்.

- Advertisement -