‘இருளின் ஓசை’ குறும்படம் ஆரம்பம்

 

‘இருளின் ஓசை’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப பூஜை கடந்த புதனன்று கொழும்பு-11, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத் தில் நடைபெற்றது.

தலைநகரில் கடந்த 43 ஆண்டுகளாக இளம் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு களம் அமைத்து அவர்களை ஊக்குவித்து வரும் புதிய அலை கலை வட்டம் உருவாக்கியுள்ள இளைஞர் அமைப்பின் ஊடாக இந்த முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய அலை கலை வட்டத்தின் தலைவர் சண்முவின் வழிகாட்டுதலில் இந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபகரும் மூத்த ஊடகவியலாளருமாக ராதாமேத்தா கலந்து கொண்டார்.

கொழும்பு நகரில் வாழும் இளம் சந்ததியினருக்கு முன்னோடி முயற்சியாக உருவாகும் இந்த குறும்படத்துக்கான கதை-வசனம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை கணேசலிங்கம் ரித்தியன் ஏற்றுள்ளார்.

முற்றிலும் இளம் நடிகர்கள் நடிகைகள் நடிக்க விருக்கும் இக்குறும்படத்தின் படப்பிடிப்பு வரும் சனியன்று ஆரம்பமாகின்றது.இதில் இணைந்து கொள்ள விரும்பும் இளம் ஆர்வலர்கள் 0776274099 என்ற அலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்