இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்து மதத்தை கேவலப்படுத்தியமைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதியில் இறங்கி போராட வேண்டிவரும், என மட்டக்களப்பு மாவட்ட கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினரால் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சமூக வலைத்தளங்களில் இந்து சமயத்தை பற்றிய கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

குறித்த காணொளி தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வெளிவந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

எமது இந்து மதத்தின் புனிதமான விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் மிகவும் அவமானப்படுத்தி பேசியுள்ளார், ஆகவே எமது இந்து மதத்தின் அமைப்புகள் ஒன்றிணைந்து அவருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது நேர்மையான ஆட்சியை புரிந்துகொண்டு இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம்,இவ்விடயத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தீர்வு கிடைக்கும் வரை வீதியில் இறங்கி போராடும் நிலை வரும், என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Minnal24 வானொலி