இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு
கிளிநொச்சியில் 55 ஆவது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வடமாகாண ஆளுநர் வேதநாயகனும் கலந்து கொண்டார்.
நேற்று பிற்பகல் 6 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கிளிநொச்சியில் உள்ள பிரதான திருச்சபைகளின் பாடகர் குழுவினரும், இராணுவத்தினரும் இணைந்து பாடல் இசைத்தனர். நத்தார் வாழ்த்துச் செய்தியை யாழ் ஆயர் வழங்கினார்.
இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்