இராஜாங்க அமைச்சரால் வீதி திறப்பு நிகழ்வு

-கிரான் நிருபர்-

கிராமங்களில் மணல் வீதிகள் அற்ற கிராமங்கள் எனும் சிந்தனையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை காலை சுங்கான்கேணியில் நடைபெற்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறாளைப்பற்று வாழைச்சேனை, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல்வேறு வீதிகள் திறந்து வைக்கப்பட்டன.

கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் கா.அமலினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த வீதி திறப்பு நிகழ்வும் குறித்த வீதிகளுக்கான பெயர் பலகையையும், பெயர் பொறிக்கப்பட்ட நினைவு கல்லினையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

குறித்த வீதி அபிவிருத்திக்கான நிதியினை கிராமிய வீதிகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் இந்த வீதி புனரமைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“சுமார் இரண்டு கிலோமீற்றர் வீதிகள் கிறவல் இட்டு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாககவும் தோளில் சுமந்து கொண்டு தங்கள் வியாபாரத்தினை மேற்கொண்ட வியாபாரிகள் இனிமேல் இலகுவாக தங்கள் வாகனங்களில் சென்று வியாபாரம் செய்ய முடியும்” என்றும் கூறினர்.

மேலும் கூறுகையில் மிக நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ( 2008 ) மாகண சபையினை பொறுப்பேற்று கிழக்கின் தலைவிதியை மாற்றினோம், அதற்கு முன்னரான காலச் சூழல் எப்படி இருந்தது என்பது இங்குள்ளவர்களுக்கு புரியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டங்களில் வரும் முடிவுகள் தீர்மானங்கள் எடுக்கின்றதை தலைவர்களிடம் விட்டு பெரும்பாலான மாற்றங்களை கொண்டு வந்தோம்.
இங்குள்ள மக்கள்தான் எழுச்சி கொண்ட மக்களாக தங்களுடைய பொருளாதாரம் என்ன, எங்களுடைய வளம் என்ன என்பதுடன் இங்குள்ள வளங்களை பயன்படுத்தகூடிய மக்களை உருவாக்கி மாவட்டத்தை கட்டி எழுப்புவதே எனதும் எமது கட்சியினதும் இலக்கு என கூறி சென்றார்.

இந்த நிகழ்வில் கோறளைப்பற்று உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் மற்றும் பிரதேச சபை செயலாளர் நவநீதன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இணைப்பு செயலாளர் ஆர். தேவராஜன் கட்சியின் அமைப்பாளர் திருநாவுக்கரசு, கிராம உத்தியோகஸ்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், பாடசாலை அதிபர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் நிர்வாகம், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சரால் வீதி திறப்பு நிகழ்வு

இராஜாங்க அமைச்சரால் வீதி திறப்பு நிகழ்வு

இராஜாங்க அமைச்சரால் வீதி திறப்பு நிகழ்வு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்