இரண்டு லொரிகள் நேருக்கு நேராக மோதி கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் குமாரபாளையம் அருகே இரண்டு லொரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சேலத்திலிருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த போது, லொரியின் முன் டயர் வெடித்ததால் லொரி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரை தாண்டி நெடுஞ்சாலையின் எதிர்த் திசையில் பொள்ளாச்சியிலிருந்து திருச்சிக்கு கோழிகளை ஏற்றிவந்த லொரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மேலும் விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்