இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இந்தியாவில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவிகள் இருவரை, டைவிங் மற்றும் ஸ்கூபா குழுவினர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்டனர்.

பாடியூர் பகுதியில் உள்ள தங்களது தோழியின் வீட்டுக்கு கடந்த 2ஆம் திகதி சென்றிருந்த மாணவிகள், அருகில் உள்ள ஆற்றில் குளித்தபோது ஆற்றில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்