இரண்டு நாட்களுக்கு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும், என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த இரண்டு தினங்களிலும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மற்றும் நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபான சாலைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.