இரண்டு ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
தென்கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு ஈரானிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள தமது இராணுவ சிப்பாய்களுக்கு எதிரான அண்மைய தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஈரானுடன் இணைந்த குழுக்களால் பயன்படுத்தப்படும் தளங்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.
அபு கமால் மற்றும் மாயாடின் நகரங்களுக்கு அருகிலுள்ள பயிற்சி நிலையம் மற்றும் பாதுகாப்பு இல்லத்துக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிழக்கு சிரியாவின் மேசுலுன் பகுதியில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் அதன் துணை அமைப்புகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதக் கிடங்கின் மீது கடந்த புதன்கிழமை அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருந்தது.