இரண்டாவதாக உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மையம்

இலங்கைக்கு அண்மையில் ஏற்கனவே காற்றழுத்த தாழ்வு மையம் உருவான பகுதியில் புதிதாக இன்னும் ஒரு தாழ்வுமையம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பிரதேசங்களில் இரு வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் இரண்டாவதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலையினால் நாட்டிற்கு பாதிப்பு எதுவும் இல்லை என கூறப்படுகின்றது.

இதேவேளை முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நகர்ந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மழைபெய்து கொண்டிருக்கின்றது.