இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட கலைக்க முடியாது
இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை-பலடுவ பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்க வழி உள்ளது. அதனை தவிர பாராளுமன்றத்தை எவராலும் கலைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.