
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறைத் தண்டனை!
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் அரசிற்கு வர வேண்டிய நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டைப் பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB) கடந்த 2023ஆம் ஆண்டில் முன்வைத்தது.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 3 முறை தீர்ப்பு திகதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது குறித்த வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் ஜாவேத் ரண தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்