இன்றோடு மூன்று வருடங்கள்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில், யாரும் எதிர்பார்த்திராத சமயத்தில் அந்த துயரம் நடந்தேறியது.

நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள சில நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அந்த தாக்குதலில் காயமடைந்த பலர் இன்றும் உடல் உறுப்புகளை இழந்து அந்த வடுவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனினும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.