Sri Lanka Tamil News Site

இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

- Advertisement -

நாட்டின் பல இடங்களில் இன்று சனிக்கிழமை மழை பெய்யக் கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, தென்மேல், மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும், மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று அவ்வப்போது 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும், என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

 

- Advertisement -