இலங்கையின் கரையோரத்தில் 60-70 கிமீ காற்று வீசக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் கரையோரப் பகுதிகள் கடுமையான காலநிலையை எதிர்கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதன்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடற்பரப்புகள் குறிப்பாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அதேபோன்று பலத்த காற்று வீசுவதுடன் மிகவும் கொந்தளிப்பான கடற்பரப்பு காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது குறைந்தளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கையின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மழை அளவு 75 மில்லிமீட்டர் பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்