இன்று வழமை போன்று பாடசாலைகள் நடைபெறும்

நாடளாவிய ரீதியில் அதிபர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் போராட்டங்களுக்கு மத்தியிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று வியாழக்கிழமை வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும்,  இன்று இரண்டாவது நாளாகவும் சுகயீன விடுமுறை போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரி நேற்று புதன்கிழமை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கடுக்கப்பட்டது.

இதன்போது,  போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்