
இன்று முதல் மீண்டும் அமுல்
பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுப்போக்குவரத்தின் போது அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் இதை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்