இன்று சிறைக்கைதிகளை உறவினர்கள் திறந்த வெளியில் சந்திக்க வாய்ப்பு!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கைதிகளின் உறவினர்களால் இன்று கைதிகளுக்குத் தேவையான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கைதிகளை பார்வையிடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்