
இன்று அதிக வெப்பம் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் இன்று சனிக்கிழமை 07 மாகாணங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
04 மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பமான வானிலை நிலவும் என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
வெயிலில் தொடர்ச்சியான செயல்பாடுகள் வெப்பப் பக்கவாதம், வெப்பப் பிடிப்புகள் மற்றும் வெப்பச் சோர்வு என்பவற்றை ஏற்படுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்