இன்றும் விசேட போக்குவரத்து சேவை!

தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கான போக்குவரத்து சேவைகள் இன்று சனிக்கிழமையும் முன்னெடுக்கப்படுகின்றன.

புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட புகையிரத சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, 10 விசேட புகையிரத சேவைகள் இயக்கப்படுவதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க