இனமத பேதங்களுக்கு அப்பால் சேவை செய்வேன்: ஏ.எஸ்.றிபாஸ்

-மூதூர் நிருபர்-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அல்லைநகர் வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.எஸ்.றிபாஸ் இன்று புதன்கிழமை மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக நான் மூதூர் பிரதேச சபையில் போட்டியிடுகின்றேன். ஏற்கனவே உள்ளூட்சி மன்ற உறுப்பினராக இருந்த அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை செய்திருக்கின்றேன்.

இம்முறையும் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன். அத்தோடு விட்டுச் சென்ற சேவைகளை இன மத பேதங்களுக்கு அப்பால் செய்து வருகின்றேன் தொடர்ந்தும் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

எமது வட்டாரத்தில் வீதி மின் விளக்குகள் , வடிகாண் பிரச்சினைகள் இன்னும் காணப்படுகின்றன.அவற்றை எமது மக்களுக்கு நிவர்த்தி செய்து கொடுப்பேன் எனவும் தெரிவித்தா

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க