
இனந்தெரியாதோரால் வீட்டிற்கு தீ வைப்பு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுயில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வீடொன்றுக்கு இனந்தெரியாத நபரால் தீ வைக்கப்பட்டதால் வீடு முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீட்டில் சம்பவ தினத்தன்று இருக்கவில்லை என்பதுடன் வீட்டு தளபாடங்கள் உட்பட பல பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature