இந்த மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டுச் சரிபார்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

253,390 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 79,795 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க