இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தின் ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி – லாகி எரிமலை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெடித்துள்ளது.
எரிமலையிலிருந்து வெளிவந்த நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்