Sri Lanka Tamil News Site

விசா அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை கைது

- Advertisement -

-நுவரெலியா நிருபர்-

விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

25 வயதான சந்தேக நபரை, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!