இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கடுமையாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.